புதிய சாதனை

புதிய சாதனை

புதிய சாதனை

எழுத்தாளர் Kanthaverl Mayooran

25 Jan, 2015 | 10:04 am

இலங்கை இராணுவப்படையைச் சேர்ந்த நிலூகா ராஜசேகர ஹொங்கொங் மரதன் ஓட்டப் போட்டியில் மகளிர் பிரிவில் 5 ஆம் இடத்தை பெற்றுள்ளார்.

போட்டித் தூரத்தை கடப்பதற்கு 2 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களும் பூச்சியம் தசம் 7 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

இதன் மூலம் மரதன் ஓட்டப் போட்டியில் மகளிர் பிரிவில் இலங்கை சாதனை முறியடிக்கப்பட்டதுடன் நிலூகா ஒலிம்பிக் மற்றும் உலக மெய்வல்லுனர் போட்டிகளுக்கான அடைவு மட்டத்தை அடைந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்