ஐ எஸ் ஆயுததாரிகளால் மற்றுமொரு ஊடகவியாலாளர் கொலை செய்யப்பட்டுள்ளார்

ஐ எஸ் ஆயுததாரிகளால் மற்றுமொரு ஊடகவியாலாளர் கொலை செய்யப்பட்டுள்ளார்

ஐ எஸ் ஆயுததாரிகளால் மற்றுமொரு ஊடகவியாலாளர் கொலை செய்யப்பட்டுள்ளார்

எழுத்தாளர் Kanthaverl Mayooran

25 Jan, 2015 | 9:51 am

ஐ எஸ் ஆயுதாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ஜப்பானிய பிரஜைகளில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான காணொளியொன்று ஆயுதாரிகளால் வெளியிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு பேரையும் விடுவிப்பதற்கு ஐ எஸ் ஆயுததாரிகளால் 200 மில்லியன் அமெரிக்க டொலர் ஜப்பான் அரசாங்கத்திடம் கோரப்பட்டிருந்தது.

எனினும் பணத்தை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கத்தினால் கோரப்பட்ட 72 மணித்தியால கால அவகாசம் நேற்றுடன் நிறைவுபெற்றது.

இந்நிலையில் சிரியாவில் சிறைப்பிடிக்கப்பட்ட ஜப்பானிய ஊடகவியலாளரை கொலை செய்த காட்சி காணொளியாக வெளியானதை அடுத்து பாராளுமன்றத்தில் அவசர கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.

இதேவேளை குறித்த காணொளியை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜப்பான் பிரதமர் கூறியுள்ளார்.

இந்த காணொளியில் மற்றொரு பணயக் கைதியான கென்ஜி கோடோ உயிருடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்