இலங்கையுடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது நியூஸிலாந்து

இலங்கையுடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது நியூஸிலாந்து

இலங்கையுடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது நியூஸிலாந்து

எழுத்தாளர் Kanthaverl Mayooran

25 Jan, 2015 | 3:46 pm

இலங்கைக்கு எதிரான ஏழு போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை மேலும் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில் நியூஸிலாந்து அணி நான்கிற்கு ஒன்று என்ற கணக்கில் தன்வசப்படுத்தியுள்ளது.

டனடின் யுனிவர்சிட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆறாவது போட்டியில் நியூஸிலாந்து அணி 120 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியதன் மூலம் தொடர் வெற்றியையும் உறுதிப்படுத்தியது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 315 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் கேன் வில்லியம்சன் 97 ஓட்டங்களையும் ரோஸ் டெய்லர் 96 ஓட்டங்களையும் பெற்றனர்.

316 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 40 புள்ளி 3 ஓவர்களில் 195 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

இலங்கை அணி சார்பில் குமார் சங்கக்கார 81 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் கொரி எண்டர்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் பிரகாரம் நியூஸிலாந்து அணி 7 போட்டிகளை கொண்ட தொடரை 4 க்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்