அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அப்பிள் பழங்களில் பக்றீரியா?

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அப்பிள் பழங்களில் பக்றீரியா?

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அப்பிள் பழங்களில் பக்றீரியா?

எழுத்தாளர் Kanthaverl Mayooran

25 Jan, 2015 | 2:35 pm

பக்றீரியா பரவும் அபாயம் காரணமாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பிள் பழங்களை களஞ்சியசாலைகளுக்கு திரும்பப்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார பாதுகாப்பு கருதி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் உணவுப் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்திய நிபுணர் ஆனந்த ஜெயலால் தெரிவித்துள்ளார்.

மீள் அறிவித்தல் வழங்கப்படும்வரை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள் பழங்களை கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆப்பிள் பழங்களில் காணப்படும் பக்கிறீயாவினால் அமெரிக்காவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் , ஆகவே நாட்டில் இவ்வாறான நிலை ஏற்படாது தடுப்பதற்கே இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள் பழங்களை மீள் களஞ்சியப்படுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாவும் வைத்திய நிபுணர் ஆனந்த ஜெயலால் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, குழந்தைகள், முதியோர் மற்றும் கர்பிணித் தாய்மார் போன்ற நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் பக்றீரியாவினால் பாதிக்கும் அபாயம் அதிகமுள்ளதாக கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதன் காரணமாக எவ்வித பதற்றங்களையும் ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்