BMICH வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான 3 கொள்கலன்கள் : ​பொலிஸார் சோதனை

BMICH வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான 3 கொள்கலன்கள் : ​பொலிஸார் சோதனை

எழுத்தாளர் Bella Dalima

16 Jan, 2015 | 5:59 pm

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் (BMICH) சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட 03 கொள்கலன்கள் பொலிஸாரின் தலையீட்டினால் இன்று (16) திறக்கப்பட்டுள்ளன.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் சட்டவிரோதமாக பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிருலப்பனை மற்றும் கறுவாத்தோட்ட பொலிஸார்  இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

ஊழல் எதிர்ப்பு அமைப்பின் பிரதிநிதிகளும் இதன் போது அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

மூன்று கொள்கலன்களில்  இருந்து சால்வையின் இலட்சினை பொறிக்கப்பட்ட உபகரணங்கள் மற்றும்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உருவம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்களும் இதிலிருந்து மீட்கப்பட்டன.

மற்றுமொரு கொள்கலனில் இருந்து கணணி  பாகங்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்