வட மாகாணத்தின் புதிய ஆளுநராக எச்.எம்.ஜீ.எஸ். பலிஹக்கார நியமனம்

வட மாகாணத்தின் புதிய ஆளுநராக எச்.எம்.ஜீ.எஸ். பலிஹக்கார நியமனம்

எழுத்தாளர் Staff Writer

16 Jan, 2015 | 12:37 pm

வட மாகாணத்தின் புதிய ஆளுநராக இலங்கையின் முக்கிய இராஜதந்திரியும், வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளருமான எச்.எம்.ஜீ.எஸ். பலிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

வட மாகாண ஆளுநராக இராணுவ பின்புலமற்ற சிவில் நிர்வாக அதிகாரி ஒருவரை அரசாங்கம் நியமித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய ஆளுநர் பலிஹக்கார, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றியுள்ளார்.

38 வருடகால இராஜதந்திர மற்றும் சிவில் நிர்வாக அனுபவத்தையுடைய பலிஹக்கார, இலங்கையின் வெளிவிவகார செயலாளர் பதவியிலிருந்து 2006 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார்.

அத்துடன் இலங்கையில் போருக்குப் பின்னரான காலப்பகுதியில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அங்கத்தவராகவும் பொறுப்புகளை நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்