‘வடக்கில் விடுவிக்கப்படும் காணிகள் முறையான பொறிமுறையின் கீழ் இடம்பெறுகிறது’

‘வடக்கில் விடுவிக்கப்படும் காணிகள் முறையான பொறிமுறையின் கீழ் இடம்பெறுகிறது’

எழுத்தாளர் Bella Dalima

16 Jan, 2015 | 6:14 pm

தேர்தலுக்குப் பின்னர் வடக்கு, கிழக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சில சம்பவங்கள் தொடர்பில் எவ்வித உண்மையும் இல்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அமைச்சின் ஊடக மையத்தின், ஊடகப் பணிப்பாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன், வடக்கில் மொத்தமாக 26 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இராணுவம் வசமிருந்தாலும், யாழ். குடாநாட்டில் 10 ஆயிரம் ஏக்கர் காணி பாதுகாப்புப் பிரிவின் வசமுள்ளது எனவும் 18 ஆயிரம் ஏக்கர் காணி பாதுகாப்புப் பிரிவினால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதும் காணிகள் விடுவிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்நடைமுறையானது முறையானதொரு பொறிமுறையின் கீழ் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்