புதிய சீருடையுடன் போட்டிகளில் கலக்கவுள்ளது இந்திய கிரிக்கெட் அணி

புதிய சீருடையுடன் போட்டிகளில் கலக்கவுள்ளது இந்திய கிரிக்கெட் அணி

புதிய சீருடையுடன் போட்டிகளில் கலக்கவுள்ளது இந்திய கிரிக்கெட் அணி

எழுத்தாளர் Staff Writer

16 Jan, 2015 | 12:06 pm

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணிக்கு புதிய சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சீருடையானது 100 சதவீதம் மீள் சுழற்சி முறை மூலமே தயார் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகக்கிண்ணத்தின் போது இந்திய கிரிக்கெட் அணி தனது சீருடையை மாற்ற திட்டமிட்டது. புதிய வகை சீருடையை நைக் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த சீருடையை, அவுஸ்ரேலியாவில் நடைபெற்றுவரும் முற்தரப்பு கிரிக்கெட் தொடரின்போதே அணிய உள்ளனர்.

ஒவ்வொரு வீரருக்குமான சீருடை சராசரியாக 33 பிளாஸ்டிக் போத்தல்களை மீள் சுழற்சி செய்ததன் மூலம் கிடைத்த பொருளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆடை மிகவும் சௌகரியமாக இருப்பதாக அணியின் தலைவர் தோனி தெரிவித்துள்ளார். “ஆடையில் ஏற்படும் ஒரு சிறிய இடையூறும் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடும். ஆனால் புதிய ஆடை மிகவும் வசதியாக உள்ளது” என்று தோனி தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்