புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றனர்

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றனர்

எழுத்தாளர் Bella Dalima

16 Jan, 2015 | 9:30 pm

புதிய அரசாங்கத்தின் பல அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் இன்று (16) தமது கடமைகளைப் பொறுப்பேற்றனர்.

சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன, துறைமுகம் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ, பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க, புத்தசாசன அமைச்சர் கரு ஜயசூரிய, மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க,  ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க மற்றும் போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்