பிரான்ஸ் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் : 10 பேர் கைது

பிரான்ஸ் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் : 10 பேர் கைது

பிரான்ஸ் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் : 10 பேர் கைது

எழுத்தாளர் Bella Dalima

16 Jan, 2015 | 4:04 pm

பிரான்ஸ் – பாரீஸ் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த ரயில் நிலையம் மூடப்பட்டது.

அத்துடன் சந்தேகத்தின்பேரில் 10 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ‘தி காரே’ ரயில் நிலையத்தில் இன்று (16) வெடிகுண்டு வைத்திருப்பதாக விடுக்கப்பட்ட மிரட்டலை அடுத்து அசம்பாவிதத்தைத் தவிர்க்கும் நோக்கத்தோடு அந்த ரயில் நிலையம் மூடப்பட்டது.

மூடப்பட்ட ‘தி காரே’ ரயில் நிலையம் பாரீஸ் நகரின் முக்கிய மைய ரயில் நிலையம் ஆகும்.

தற்போது அந்த ரயில் நிலையம் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்