பாராளுமன்றம் எதிர்வரும் 20 ஆம் திகதி கூடவுள்ளது

பாராளுமன்றம் எதிர்வரும் 20 ஆம் திகதி கூடவுள்ளது

பாராளுமன்றம் எதிர்வரும் 20 ஆம் திகதி கூடவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

16 Jan, 2015 | 12:22 pm

பாராளுமன்றத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி கூடச் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் கலந்துரையாடவுள்ள விடயங்கள் குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கக கூறினார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கான ஆசனங்களை ஒழுங்கமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஆயினும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆசனங்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டிய விதம் குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை, பாராளுமன்றம் கூடிய பின்னர், புதிய எதிர்கட்சித் தலைவர் ஒருவரும் நியமிக்கப்படவுள்ளார்.

இந்த பதவிக்கு நியமிக்கப்படுகின்றவர் யார் என்பது குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும், பாராளுமன்ற செயலாளர் நாயகம் நியூஸ்பெஸ்டுக்கு கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற கட்சித் தாவல்களை அடுத்து, ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்