பட்டிப்பொங்கல் இன்று (VIDEO)

பட்டிப்பொங்கல் இன்று (VIDEO)

பட்டிப்பொங்கல் இன்று (VIDEO)

எழுத்தாளர் Staff Writer

16 Jan, 2015 | 1:28 pm

இயற்கையையும் தொழிலையும் மதித்து வணக்கும் தமிழர் திருநாளே தைப்பொங்கல் ஆகும்.

உழவுத் தொழிலில் உழவனுக்கு உறுதுணையாய் இருக்கும் எருதுகளுக்கு பொங்கல் இட்டு மரியாதை செய்யும் பட்டிப் பொங்கல் இன்றாகும்.

தமிர்களின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் எடுத்துரைக்கும் தைத்திருநாள் இரண்டாம் நாள்
நிகழ்வான பட்டிப்பொங்கல் காலம் காலமாக முக்கியத்துவம்  பெறும்  கால்நடைகளுக்கான பண்டிகை ஆகும்.

மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாக பட்டிப்பொங்கல் திகழ்கின்றது.

அன்று பசுக்கள் மற்றும் எருதுகளை கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து  அவைகளை நீராட்டி கொம்புகள் சீவப்பிட்டு பளபளக்கும் வகையில் வர்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடப்படும.

கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் சலங்கை கட்டி திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டு புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

உழவுக்கருவிகள் உள்ளிட்ட விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளும் இந் நாளில் சுத்தம் செய்யப்படும்.

தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுக்கப்படும்.

உழைப்பில் உதவும் உயிரினத்தை நன்றி செலுத்தவும் பசுச் செல்வங்களை நேசிக்கும் மரியாதை செய்யும் மனித
மாண்பையும் பட்டிப்பொங்கல் வெளிப்படுத்துகின்றது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்