நாரஹேன்பிட்டி சிறிய ரக விமானம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம்

நாரஹேன்பிட்டி சிறிய ரக விமானம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம்

நாரஹேன்பிட்டி சிறிய ரக விமானம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம்

எழுத்தாளர் Staff Writer

16 Jan, 2015 | 6:53 am

நாரஹேன்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள களஞ்சியமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்ட சிறிய ரக விமானம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மாஅதிபரின் பணிப்பின் பேரில், இந்த விசாரணைகள் கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

விமானத்தின் உரிமை மற்றும் அதனை எவரேனும் பொறுப்பேற்றிருந்தால் அதுகுறித்த உரிய தகவல்களை அறிந்துகொள்வதே இந்த விசாரணையின் நோக்கமாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

குறிப்பிட்ட விமானத்தை சிலர் கொண்டுசெல்வதற்கு முயற்சிப்பதாக கிடைத்த தகவலின் பிரகாரம் நாரஹேன்பிட்ட பொலிஸார் நடத்திய சோதனையின்போது, அந்த விமானம் கைப்பற்றப்பட்டது.

இரண்டு பேர் மாத்திரம் இந்த விமானத்தில் பயணிக்க முடியும் என்பதுடன், கைப்பற்றப்பட்ட சந்தர்ப்பத்தில் விமானம் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்