குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் மொனராகலையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானார்

குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் மொனராகலையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானார்

குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் மொனராகலையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானார்

எழுத்தாளர் Bella Dalima

16 Jan, 2015 | 5:36 pm

மொனராகலை:  வெல்லவாய – குடாஓயா பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரே  துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பொலிஸ் அதிகாரிகள் அந்த பிரதேசத்திற்கு சென்றிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதன் போது சந்தேகநபர் தப்பித்துச்செல்ல முற்பட்ட போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.

வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சந்தேக நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, அதுருகிரிய பிரதேசத்தில் கடத்தப்பட்ட வேன் ஒன்றை மீட்கச்சென்ற பொலிஸார் மீது பாதுக்கையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வேனில் காணப்படும் ஜீ.பீ.எஸ். தொழில் நுட்பத்தின் ஊடாக வேன் இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடிந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதனடிப்படையில், அதுருகிரிய பொலிஸார் குறித்த வேனை பின்தொடர்ந்துள்ளதுடன் பாதுக்க பொலிஸாரும் உதவிக்குச் சென்றுள்ளனர்.

வேனை மீட்கச் சென்றபோது பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன் மற்றுமொரு சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்