ஒஸ்காருக்கான பரிந்துரைப் பட்டியலில் ரஹ்மானின் பெயர் இடம்பெறவில்லை

ஒஸ்காருக்கான பரிந்துரைப் பட்டியலில் ரஹ்மானின் பெயர் இடம்பெறவில்லை

ஒஸ்காருக்கான பரிந்துரைப் பட்டியலில் ரஹ்மானின் பெயர் இடம்பெறவில்லை

எழுத்தாளர் Staff Writer

16 Jan, 2015 | 10:36 am

ஒஸ்கார் மன்னன் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் இந்த ஆண்டுக்கான ஒஸ்கார் விருது பரிந்துரைப் பட்டியலில் இல்லை. இதனால் மீண்டும் ஒஸ்கார் பெறும் வாய்ப்பை இழந்துவிட்டார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஸ்லம் டோக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஒஸ்கார் விருதுகளை பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தார். அதன் பிறகு அவர் மீண்டும் ஒஸ்கார் விருதைப் பெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருதுக்கு பரிந்துரை செய்ய தகுதியான படங்கள் பட்டியலில் அவர் இசையமைத்த தி ஹன்ட்ரட் புட் ஜர்னி, மில்லியன் டொலர் ஆர்ம் ஆகிய ஹொலிவுட் படங்களும், ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படமும் இடம்பெற்றது.

இந்நிலையில் 87வது ஒஸ்கார் விருதுக்கான சிறந்த ஒரிஜினல் ஸ்கோருக்கான பரிந்துரை பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஏ.ஆர்.ரஹ்மானன் பெயர் இல்லை. இதனால் அவர் ஒஸ்கார் விருதைத் தவறவிட்டுள்ளார். இது குறித்து ரஹ்மான் கூறுகையில், எனக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. கடவுள் என்னிடம் அன்பாக உள்ளார் என்று நினைக்கிறேன். இது என் நீண்ட பயணத்தில் ஒரு நிறுத்தம் அவ்வளவு தான் என்றார். இந்த ஆண்டுக்கான ஒஸ்கார் விருது வழங்கும் விழா வரும் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெற உள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்