எதிர்க்கட்சித் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமனம்

எதிர்க்கட்சித் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

16 Jan, 2015 | 6:25 pm

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமிப்பதற்கு, கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் நிறைவேற்றுக்குழு ஆகியன இன்று அனுமதி வழங்கியுள்ளன.

மத்திய செயற்குழுவின் அனுமதி கிடைத்ததன் பின்னர், இன்று மாலை கூடிய நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் ஏகமனதாக இந்தத் தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசி குறிப்பிட்டார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகர்களாக செயற்படுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளராக தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா செயற்படவுள்ளார்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டதாகவும், எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக டபிள்யூ. டீ.ஜே செனவிரத்ன தெரிவுசெய்யப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்தார்.

இதேவேளை, பாராளுமன்ற அவை முதல்வராக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்