உகன பகுதியில் காணாமல்போன ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது

உகன பகுதியில் காணாமல்போன ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது

உகன பகுதியில் காணாமல்போன ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

16 Jan, 2015 | 9:12 am

உகன பகுதியில் காணாமல்போன ஒருவரின் சடலம் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உகன, வெலிகஹகொல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

இந்த நபர் நேற்று முன்தினம் இரவு காணாமல் போயிருந்ததாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து குறிப்பிட்ட நபரின் வீட்டிற்கருகிலுள்ள கால்வாய் ஒன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிடுகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்