இருவேறு வாகன விபத்துக்களில் இருவர் பலி

இருவேறு வாகன விபத்துக்களில் இருவர் பலி

இருவேறு வாகன விபத்துக்களில் இருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

16 Jan, 2015 | 12:42 pm

கந்தானை மற்றும் வரக்காபொல பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு வாகன விபத்துகளினால் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கந்தானை, மைலகஹவத்த பகுதியில் ஜீப் வாகனத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த ஜீப் வாகனத்தை, குறுக்கு வீதியூடாக செலுத்துவதற்கு முற்பட்டபோது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

விபத்தில் 44 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு – கண்டி பிராதன வீதியின் தொலங்கமுவ பகுதியில் வீதியைக் கடப்பதற்கு முற்பட்ட ஒருவர் வேனுடன் மோதி உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்