இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் பிரதமர்

இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் பிரதமர்

எழுத்தாளர் Bella Dalima

16 Jan, 2015 | 7:33 pm

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற மத அனுஷ்டானங்களின் பின்னரே அவர் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வில் மகா சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களுக்கும் இடையில்  இன்று விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

ஐக்கிய ​தேசியக் கட்சியின் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்