அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டால் அரசாங்கத்தைத் தட்டிக்கேட்க முடியாது – பொன். செல்வராசா

அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டால் அரசாங்கத்தைத் தட்டிக்கேட்க முடியாது – பொன். செல்வராசா

எழுத்தாளர் Bella Dalima

16 Jan, 2015 | 5:23 pm

அமைச்சுப் பதவிகளைத் தமது கட்சி பெற்றுக்கொண்டால் தற்போதைய அரசாங்கத்தின் தவறுகளைத் தட்டிக்கேட்க முடியாமல் போகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – கல்லடி விவேகானந்தா மகளிர் வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

தமிழர்களின் பிரச்சினைகளை அண்மையில் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியிடம் தாம் தெரிவித்துள்ளதாகவும் அவை அனைத்திற்கும் அவர் பச்சைக்கொடி காட்டியுள்ளார் எனவும் பொன். செல்வராசா குறிப்பிட்டார்.

அத்துடன்,  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அதற்கு இணங்கியுள்ளதாகக் கூறினார்.

தமது இலக்கு அமைச்சுப் பதவிகள் அல்ல என குறிப்பிட்ட அவர், அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டால்  அரசாங்கத்தின் தவறுகளை தட்டிக்கேட்க முடியாத நிலை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்