பாப்பரசரின் விஜயத்திற்காக மூடப்பட்ட பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன

பாப்பரசரின் விஜயத்திற்காக மூடப்பட்ட பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன

பாப்பரசரின் விஜயத்திற்காக மூடப்பட்ட பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன

எழுத்தாளர் Bella Dalima

15 Jan, 2015 | 5:52 pm

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கடந்த 12 ஆம் திகதி மூடப்பட்ட பாடசாலைகள் யாவும் நாளை திறக்கப்படவுள்ளன.

பாப்பரசரின் விஜயத்தை முன்னிட்டு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக இந்த பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, மூடப்பட்டிருந்த கொழும்பு ரோயல் கல்லூரி, சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி, தர்ஸ்டன் கல்லூரி, டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி ஆகிய பாடசாலைகளும், கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிலுள்ள மகாநாம கல்லூரி, புனித அந்தோனியார் மகளிர் கல்லூரி, புனித மரியா மகளிர் கல்லூரி ஆகியனவும் திறக்கப்படவுள்ளன.

கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புனித அந்தோனியார் தமிழ் வித்தியாலயம், அல் அஸார் வித்தியாலயம், புளுமெண்டால் தமிழ் வித்தியாலயம் உள்ளிட்ட சில பாடசாலைகளும் நாளை திறக்கப்படவுள்ளன.

அத்துடன், பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவிலுள்ள இந்து ஆண்கள் பாடசாலை உட்பட சில பாடசாலைகளும், நாரஹேன்பிட்ட, கொட்டாஞ்சேனை, பொரளை, தெமட்டகொட, மாளிகாவத்தை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலுள்ள பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுதவிர, மருதானை மற்றும் கொம்பனித்தெரு ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட சில பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் கூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்