தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகள் தொடர்பில் ஆராய மேலதிக செயலாளர் நியமனம்

தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகள் தொடர்பில் ஆராய மேலதிக செயலாளர் நியமனம்

தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகள் தொடர்பில் ஆராய மேலதிக செயலாளர் நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

15 Jan, 2015 | 3:26 pm

தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகள் தொடர்பில் ஆராய்ந்து, நடவடிக்கை எடுப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் டீ.எம்.எஸ் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அரச பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் எந்தவொரு பகுதியிலும் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் அறிவிக்க முடியும்.

அவ்வாறான முறைப்பாடுகளை 0112 335 792 / 0112 335 794 / 0112 335 795 அல்லது 0718 345 124 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்க முடியுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 0112 335 797 என்ற தொலைநகல் இலக்கத்திற்கும் முறைப்பாடுகளை முன்வைப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்