தெற்கு அதிவேக வீதியில் பயணித்த வேன் திடீரென தீப்பற்றியது

தெற்கு அதிவேக வீதியில் பயணித்த வேன் திடீரென தீப்பற்றியது

எழுத்தாளர் Bella Dalima

15 Jan, 2015 | 6:05 pm

களுத்துறை தெற்கு பகுதியில் தெற்கு அதிவேக வீதியூடாக பயணித்த வேன் ஒன்று திடீரென தீப்பற்றியுள்ளது.

இந்த சம்பவம் இன்று (15) முற்பகல் 11.15 அளவில் இடம்பெற்றுள்ளது.

காலியில் இருந்து கடுவெல நோக்கிப் பயணித்த வேன் ஒன்றே திடீரென தீப்பற்றியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தீப்பற்றிய சந்தர்ப்பத்தில் வேனில் மூவர் இருந்ததாகவும், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்