தடுத்துவைக்கப்பட்டுள்ள 15 தமிழக மீனவர்களை விடுவிக்க ஜனாதிபதி தீர்மானம்

தடுத்துவைக்கப்பட்டுள்ள 15 தமிழக மீனவர்களை விடுவிக்க ஜனாதிபதி தீர்மானம்

தடுத்துவைக்கப்பட்டுள்ள 15 தமிழக மீனவர்களை விடுவிக்க ஜனாதிபதி தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

15 Jan, 2015 | 3:39 pm

நாட்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 15 தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழக மீனவர்களின் 87 படகுகள் கைப்பற்றப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டுள்ளன.

குறித்த படகுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதன் பின்னர், படகுகளை விடுவிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்