கொலைச் சம்பவமொன்றின் சந்தேகநபர் குத்திக்கொலை

கொலைச் சம்பவமொன்றின் சந்தேகநபர் குத்திக்கொலை

கொலைச் சம்பவமொன்றின் சந்தேகநபர் குத்திக்கொலை

எழுத்தாளர் Bella Dalima

15 Jan, 2015 | 3:45 pm

கொழும்பு, வாழைத்தோட்டம் பகுதியில் கூரிய ஆயுதத்தினால் குத்தி ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை 4 மணியளவில் இனந்தெரியாத குழுவினரால், குறித்த நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.

27 வயதான ஒருவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறை அடிப்படையாகக்கொண்டு இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், கொலைச் சம்பவமொன்றின் சந்தேகநபரே தற்போது உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்