ஐக்கியத்தை வெளிப்படுத்துவதே தைப்பொங்கல் பண்டிகை: ஜனாதிபதியும் பிரதமரும் வாழ்த்து

ஐக்கியத்தை வெளிப்படுத்துவதே தைப்பொங்கல் பண்டிகை: ஜனாதிபதியும் பிரதமரும் வாழ்த்து

எழுத்தாளர் Bella Dalima

15 Jan, 2015 | 2:51 pm

மனிதர்களுக்கும், இயற்கைக்கும் இடையில் பலமான பிணைப்பை ஏற்படுத்த தெய்வ வழிபாடுகளில் மக்கள் ஈடுபட்டு சமூகங்களின் ஐக்கியத்தை வெளிப்படுத்துவதே தைப்பொங்கல் பண்டிகை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

பொங்கலானது விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்தின் எல்லா அம்சங்களிலும் சூரிய பகவானிடமிருந்து கிடைத்த ஆசிர்வாதத்திற்கு நன்றி செலுத்துவதாய் அமைந்துள்ளதாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் சமாதானம், ஐக்கியம் மற்றும் சுபீட்சத்திற்காக, அன்பு மற்றும் காருண்யத்துடன் தனது பதவிக்காலத்தின் ஆரம்பத்தில் வாழ்த்து தெரிவிப்பதையிட்டு, பெருமகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, நாளாந்தம் இலங்கை சமூகத்திலிருந்து தூரமாகும் சமத்துவத்தை மீள ஏற்படுத்தும் சூழல் புதிய அரசியல் சூழலுடன் உருவாகியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமத்துவத்தின் மேன்மையையும், நன்றிக் கடனின் உயர்வையும் பொங்கல் பண்டிகை உணர்த்தி நிற்பதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூகத்திலிருந்து தூரமாகும் மதிக்கும் குணத்தையும், நன்றி பாராட்டும் பண்பையும் மீள ஏற்படுத்தும் சூழல் தற்போது உருவாகியுள்ள நிலையில், அத்தகைய நற்குணம் மிக்க சூழலை உருவாக்கும் கஷ்டமான சவாலுக்கு முகம்கொடுக்க பொங்கல் தினத்தில் உறுதி பூணுவோம் என ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியின் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்