இலங்கை விஜயத்தை நிறைவுசெய்தார் பாப்பரசர்

இலங்கை விஜயத்தை நிறைவுசெய்தார் பாப்பரசர்

எழுத்தாளர் Bella Dalima

15 Jan, 2015 | 3:17 pm

இலங்கைக்கான மூன்று நாள் விஜயத்தை நிறைவுசெய்து, பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் இன்று காலை நாட்டிலிருந்து புறப்பட்டுச்சென்றுள்ளார்.

இதனை முன்னிட்டு விசேட நிகழ்வொன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றதுடன், இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரச உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பாப்பரசரின் இலங்கை விஜயத்தின்போது, அருளாளர் ஜோசப் வாஸ் அடிகளார் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டதுடன், காலி முகத்திடலில் நேற்று காலை நடைபெற்ற விசேட திருப்பலி ஆராதனையில் இலட்சக்கணக்கானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மன்னார், மடு தேவாலயத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஆராதனைகளிலும் பரிசுத்த பாப்பரசர் கலந்துகொண்டிருந்தார்.

இலங்கைக்கான விஜயத்தை நிறைவுசெய்துள்ள பரிசுத்த பாப்பரசர், பிலிப்பைன்ஸின் மணிலா நகருக்கு தற்போது விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்