அனைத்துத் தரப்பு போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார் பிரட்லீ

அனைத்துத் தரப்பு போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார் பிரட்லீ

அனைத்துத் தரப்பு போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார் பிரட்லீ

எழுத்தாளர் Bella Dalima

15 Jan, 2015 | 4:17 pm

அவுஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட்லீ அனைத்து தரப்புப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

20 வருட தனது  கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வை இன்று அறிவித்தார்.

38 வயதாகும் பிரட் லீ  2012 ஆம் ஆண்டு  ஜூலை மாதம்  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 

ஆனால், 20 ஓவர் கிரிக்கெட் இந்திய பிரிமியர் போட்டிகள், அவுஸ்திரேலிய உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார்.

இந்நிலையில், இன்று அவுஸ்திரேலிய  சிட்னி கிரிக்கெட்  மைதானத்தில் வைத்து அனைத்து தரப்பு போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.

இவர் 76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 310 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உள்ளார்.

380 ஒருநாள் போட்டிகளில் 221 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்