மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது தற்போதுள்ள பணியாகும்- சோபித தேரர்(VIDEO)

மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது தற்போதுள்ள பணியாகும்- சோபித தேரர்(VIDEO)

மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது தற்போதுள்ள பணியாகும்- சோபித தேரர்(VIDEO)

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2015 | 11:03 am

100 நாள் வேலைத்திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதி மொழிகளை நிறைவேற்ற முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்வோம் என்ற தலைப்பில் இன்று இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

இதன் போது மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்ததாவது

[quote]அதிகாரத்திற்கு வந்தவர்களை வரவேற்கும் செயற்பாடுகளில் மாத்திரம்  நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பு  செயற்படாது . 62 இலட்சம் மக்கள் அங்கீகரித்த கொள்கையை நிறைவேற்றுவது தற்போதுள்ள பணியாகும். நாட்டின் ஆட்சிக்கு அனைவரையும் இணைத்துக் கொண்டு தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்போம். தகவல் அறியும் உரிமையை மக்களுக்கு வழங்கி அமைச்சரவையை 25 க்கு குறைப்போம். அரசியல் கட்சிகளின் தாவலை கட்டுப்படுத்தி அரசியல் பயணத்தை மாற்றி நீண்ட பயணத்தை ஆரம்பித்துள்ளோம். இதன் போது தான் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம். 100 நாள் திட்டத்தில்  அந்ததந்த நாளில் இடம்பெற வேண்டிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை மீற வேண்டாம்[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்