வடபகுதியிலுள்ள இராணுவ முகாம்கள் மீது கற்கள் எறியப்படுவதாக வதந்திகளை பரப்பிய ஒருவர் கைது

வடபகுதியிலுள்ள இராணுவ முகாம்கள் மீது கற்கள் எறியப்படுவதாக வதந்திகளை பரப்பிய ஒருவர் கைது

வடபகுதியிலுள்ள இராணுவ முகாம்கள் மீது கற்கள் எறியப்படுவதாக வதந்திகளை பரப்பிய ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2015 | 1:02 pm

வடபகுதியில் உள்ள இராணுவ முகாம்கள்மீது கற்கள் எறியப்படுவதாக வதந்திகளை பரப்பிய ஒருவர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி குண்சாலை பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தகைய வதந்திகளை பரப்பிய ஒருவர் ஏற்கனவே காலி நெலுவை பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்