மூன்றாவது முறையாகவும் ‘FIFA’ சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றார்  ரொனால்டோ

மூன்றாவது முறையாகவும் ‘FIFA’ சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றார் ரொனால்டோ

மூன்றாவது முறையாகவும் ‘FIFA’ சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றார் ரொனால்டோ

எழுத்தாளர் Bella Dalima

13 Jan, 2015 | 3:15 pm

FIFA ‘பிபா’ சிறந்த கால்பந்து வீரர் விருதை போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மூன்றாவது முறையாகவும் வென்றுள்ளார்.

நான்கு முறை இந்த விருதை வென்ற மெஸ்சி இம்முறையும் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது வழங்கப்படுகிறது.

இதன்படி,  இந்த ஆண்டு விருதுக்கான இறுதிப் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவின் மெஸ்சி, உலக கோப்பை வென்ற ஜெர்மனி அணி கோல்கீப்பர் மானுவல் நுாயர் இடம்பெற்றனர்.
சிறந்த வீரர் விருதை தக்கவைத்துக்கொண்ட ரொனால்டோ கூறுகையில்,

[quote]FIFA சிறந்த வீரர் விருதை மூன்றாவது முறையாக கைப்பற்றுவேன் என எதிர்பார்க்கவில்லை. இதற்கு உதவியாக இருந்த சக அணி வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 2015 ஆம் ஆண்டு ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதை கடந்த ஆண்டைவிட சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளேன்,[/quote]

என்றார்.

சிறந்த வீராங்கனைக்கான விருதை ஜெர்மனியின் நாடின் கெப்லர் தட்டிச்சென்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்