மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்பு

மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்பு

மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2015 | 7:28 am

சந்தையில் மரக்கறி வகைகளின் விலை தொடர்ந்தும் அதிகரித்து காணப்படுகிறது. அண்மையில் நிலவிய சீரற்ற வானிலையால் மரக்கறி செய்கை அழிவடைந்தமையே இதற்கான முக்கிய காரணம் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்ற மரக்கறி வகைகளின் அளவும் தற்போது வெகுவாக குறைவடைந்துள்ளன.
கொழும்பு மெனிங் சந்தைக்கு நாளாந்தம் கொண்டுவரப்படுகின்ற மரக்கறியின் அளவு 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக மெனிங் சந்தை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

யாழ் குடாநாட்டிலும் மரக்கறி வகைகளின் அளவு அதிகரித்துள்ளதால் நுகர்வோர் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஒருசில மரக்கறி விகைகளின் விலை குறிப்பிடத்தக்களவில் உயர்வடைந்துள்ளது.
இதேவேளை தம்புளை பொருளாதார மத்திய நிலையத்திலும் மரக்கறி வகைகளின் விலை அதிகரித்து காணப்படுவதாக எமது செய்தியாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்