பெற்றோல் உட்பட 10 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்கத் திட்டம்: ரவி கருணாநாயக்க

பெற்றோல் உட்பட 10 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்கத் திட்டம்: ரவி கருணாநாயக்க

எழுத்தாளர் Bella Dalima

13 Jan, 2015 | 7:27 pm

பெற்றோல் உள்ளிட்ட 10 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்கும் வகையிலான இடைக்கால வரவு செலவுத்திட்டமொன்றை எதிர்வரும் 29ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனது கடமைகளைப் பொறுப்பேற்ற வேளையிலே​யே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சர்வமத அனுஷ்டானங்களின் பின்னர் தமது கடமைகளை அவர் பொறுப்பேற்றார்.

இதன்போது, தமது அமைச்சின் எதிர்கால நடவடிக்கை குறித்து ஊடகவியலாளர்களுக்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெளிவுபடுத்தினார்.

பொருளாதாரத்தின் உண்மையான நிலை என்னவென்பது குறித்து தெளிவூட்ட வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், 100 நாட்களுக்குள் 10 நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என பொதுமக்களுக்கு உறுதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்