பாப்பரசரின் வருகையை முன்னிட்டு மடுத்திருத்தலத்தில் விசேட ஏற்பாடுகள்

பாப்பரசரின் வருகையை முன்னிட்டு மடுத்திருத்தலத்தில் விசேட ஏற்பாடுகள்

எழுத்தாளர் Bella Dalima

13 Jan, 2015 | 8:08 pm

பாப்பரசரின் வருகைக்காக வரலாற்று சிறப்புமிக்க மன்னார் மடுத் திருத்தலத்தில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

திருத்தலத்தில் கூடவுள்ள இலட்சக்கணக்கான மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளை குறிப்பிட்டார்.

பாப்பரசர் பங்கேற்கும் ஆராதனையில் கலந்துகொள்வதற்காக ஏற்கனவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியுள்ளதாகவும் அருட்தந்தை தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்