பரிசுத்த பாப்பரசரின் வருகை இன்று

பரிசுத்த பாப்பரசரின் வருகை இன்று

பரிசுத்த பாப்பரசரின் வருகை இன்று

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2015 | 8:21 am

பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரன்ஸிஸ் இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். பரிசுத்த பாப்பரசர் இன்று காலை 9 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளார்

பாப்பரசர் இந்த வருடத்தில் விஜயம் மேற்கொள்ளும் முதல் ஆசிய நாடு இலங்கை என்பது விசேட அம்சமாகும். பரிசுத்த பாப்பரசரொருவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் மூன்றாவது சந்தரப்பமாக இது அமைந்துள்ளது

இதற்கு முன்னர் 1970 ஆம் மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில் பரிசுத்த பாப்பரசர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

பரிசுத்த பாப்பரசர் முற்பகல் 9 மணிக்கு வருகை தந்ததன் பின்னர் 9.45 வரை அரச வரவேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளதாக கத்தோலிக்க ஊடக நிலையத்தின் பணிப்பார்ள அருட்தந்தை சிறில் காமினி கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்