நாரஹேன்பிட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறியரக விமானம் கைப்பற்றப்பட்டுள்ளது

நாரஹேன்பிட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறியரக விமானம் கைப்பற்றப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

13 Jan, 2015 | 7:07 pm

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்தியநிலைய களஞ்சியமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறியரக விமானம் ஒன்று பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தை சிலர் கொண்டு செல்ல முற்படுவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய நாரஹேன்பிட்ட பொலிஸார் அதனைக் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார். 

இரண்டு பேர் மாத்திரம் பயணிக்கக்கூடிய வசதிகளைக்கொண்ட இந்த சிறிய ரக விமானம் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் நாரஹேன்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்