தேசிய நிறைவேற்று சபைக்கு தமது கட்சி தயார் – அநுர குமார திசாநாயக்க (VIDEO)

தேசிய நிறைவேற்று சபைக்கு தமது கட்சி தயார் – அநுர குமார திசாநாயக்க (VIDEO)

தேசிய நிறைவேற்று சபைக்கு தமது கட்சி தயார் – அநுர குமார திசாநாயக்க (VIDEO)

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2015 | 10:46 am

அமைச்சரவை பதவிகளைப் பொறுப்பேற்கா விடினும் தேசிய நிறைவேற்று சபைக்கு தமது கட்சி தயாராக உள்ளதாக  மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற அந்த கட்சியின் ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது அநுர குமார திசாநாயக்க தெரிவித்ததாவது :
[quote]இந்த அரசாங்கத்தினால் பங்குதாரராக இல்லா விடினும் இந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெறா விடினும் அதற்கு மேலாக உள்ள தேசிய நிறைவேற்று சபை ஒன்றை ஸ்தாபிக்க யோசனை வழங்கியுள்ளோம். இதனை ஏனைய தரப்புகளுடன் கலந்துரையாடி உள்ளோம். அதற்கு அவர்கள் இனக்கம் தெரிவித்துள்ளனர். அந்த தேசிய நிறைவேற்று சபையின் பங்குதாரர்கள் என்ற வகையில் நாங்கள் தொடர்புப்படுவோம். விஷேடமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளடக்கப்பட்ட தேசிய சபையை ஸ்தாபிக்க வேண்டும்.[/quote]

மேலும் ஊழல் மோசடிகள் தொடர்பாகவும் தெரிவித்தார் :

[quote]பாரிய ஊழல் மோடிகளுடன் தொடர்புடையவர்கள் நாட்டை விட்டு  வௌியேறி வருகின்றனர். விமான நிலையத்தை மூடுமாறு கூற வில்லை். ஆனால் இவை வெறுமனே விட்டுவிட முடியாது. நாமல் ராஜபக்ஸ , பெசில் ராஜபக்ஸ , அஜித் நிவாட் கப்ரால்  மற்றும் ஹெஜ்ஜிங் ஒப்பந்தம் உட்பட பாரிய மோசடிகள் குறித்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் நாளை  முறைப்பாடு செய்வோம். தற்போது மிகவும் தௌிவான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி சாதாரணமாக அதிகாரத்தை விட்டு செல்ல வில்லை்.  வார இறுதி ஆங்கில பத்திரிகைகளில் இது குறித்து தகவல்கள் வௌியிடப்பட்டுள்ளது. இறுதி தருனத்தில் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள செயற்பட்டமை வௌிப்பட்டுள்ளது. எமது நாட்டு மக்களின் ஆட்சி மாற்ற விருப்பத்திற்கான உரிமையை கொள்ளையடிக்கும் வகையில் சூழ்ச்சி நடவடிக்கையாகவே இது காணப்படுகின்றது. அதற்கு எதிராக சட்ட நடவடிக்​கை எடுக்கப்பட வேண்டும். இதனை மக்கள் விடுதலை முன்னணி கூர்மையாக அவதாணிக்கும். [/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்