தாக்குதல் தொடர்பில் இரண்டு பிரதேச சபைத் தலைவர்களை கைது செய்ய நடவடிக்கை

தாக்குதல் தொடர்பில் இரண்டு பிரதேச சபைத் தலைவர்களை கைது செய்ய நடவடிக்கை

தாக்குதல் தொடர்பில் இரண்டு பிரதேச சபைத் தலைவர்களை கைது செய்ய நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

13 Jan, 2015 | 5:12 pm

தாக்குதல் சம்பவம் தொடர்பில் திவுலப்பிட்டிய மற்றும் பாத்த ஹேவாஹெட்ட பிரதேச சபைகளின் தலைவர்களைக் கைது செய்வதற்கான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஷாந்தினி கோங்கஹகே மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் பாத்த ஹேவாஹெட்ட பிரதேச சபையின் தலைவரை கைது செய்யவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் திவுலப்பிட்டிய பிரதேச சபைத் தலைவரை கைது செய்வதற்கான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சந்தேகநபர்களான இரண்டு பிரதேச சபைத் தலைவர்களும் பொலிஸாரிடமிருந்து தலைமறைவாகி உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்