சஜின் டி வாஸ் குணவர்தனவின் வீட்டிலிருந்த யானைக்குட்டி மீட்கப்பட்டது

சஜின் டி வாஸ் குணவர்தனவின் வீட்டிலிருந்த யானைக்குட்டி மீட்கப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

13 Jan, 2015 | 9:54 pm

பாராளுமன்ற உறுப்பினர்  சஜின் டி வாஸ் குணவர்தனவின் வீட்டு வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட யானைக் குட்டியின் பெறுமதி ஒரு கோடி ரூபா என வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த யானைக்குட்டி 2009  ஆம் ஆண்டு  வன ஜீவராசிகள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

சஜின் டி வாஸ் குணவர்தனவின் அம்பலாங்கொடையில் உள்ள வீட்டினை ஹிக்கடுவ வனஜீவராசிகள் அதிகாரிகள் சுற்றிவளைத்தபோது இந்த யானைக்குட்டியைக் கண்டுள்ளனர்.

யானையை வைத்திருப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை இன்று காலை 9 மணிக்கு வழங்குவதாக வீட்டில் இருந்தவர்கள் நேற்று (12) குறிப்பிட்டிருந்தனர்.

எனினும்,  எவரேனும் ஒருவரிடம் யானையொன்று இருக்குமாயின் திணைக்களம் கேட்கின்ற சந்தர்ப்பத்தில் அனுமதிப்பத்திரம்  காண்பிக்கப்பட வேண்டியது சட்டமாகும்.

நேற்று அனுமதிப்பத்திரத்தை வழங்காவிடினும்  திணைக்கள அதிகாரிகள் இன்று சென்ற போது அனுமதிப்பத்திரத்தை வழங்கியதாக வன ஜீவராசி அதிகாரிகள் நியூஸ்பெஸ்டிற்குக் கூறினர்.

சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டபோது ஔிப்பதிவு செய்வதற்கான அனுமதி நேற்று வழங்கப்படாத போதிலும் இன்று ஊடங்களுக்கு அதற்கான அனுமதி வழங்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்