கொழும்பில் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம்

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம்

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம்

எழுத்தாளர் Bella Dalima

13 Jan, 2015 | 5:00 pm

காலிமுகத்திடலில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் கலந்துகொள்ளவுள்ள வைபவம் காரணமாக நாளை விசேட வாகனப் போக்குவரத்து ஒழுங்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலிமுகத்திடல் ஊடாக லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் வரை நாளை வாகனப் போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அத்துடன் வங்கி மாவத்தை பகுதியும் மூடப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தையின், இராணுவ தலைமையகம் வரையான பகுதியும் மூடப்படவுள்ளது.

பாப்பரசர் கலந்துகொள்ளும் வைபவம் நிறைவடையும் வரை இந்த வீதிகள் நாளை மூடப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்