ஊவா மாகாண முதலமைச்சர் பதவியை பெற்றுத்தருமாறு ஹரீன் பெர்னாண்டோ ஆளுநரிடம் கோரிக்கை

ஊவா மாகாண முதலமைச்சர் பதவியை பெற்றுத்தருமாறு ஹரீன் பெர்னாண்டோ ஆளுநரிடம் கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

13 Jan, 2015 | 10:05 pm

ஊவா மாகாணத்தின் முதலமைச்சர் பதவியை தமக்குப் பெற்றுத்தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் ஹரீன் பெர்னாண்டோ ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆளும் தரப்பின் ஐந்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் சத்தியக்கடதாசி மூலம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

ஊவா மாகாணத்தில் அதிக குளிருடன் கூடிய வானிலை நிலவுவதாகத் தெரிவித்து மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருந்த விடுமுறை முடிவடைந்ததை அடுத்து இன்று காலை 10 மணிக்கு சபை கூடியது.

ஆளும் தரப்பில் உள்ள 20 உறுப்பினர்களுள் 11 பேர் மாத்திரமே சபைக்கு வந்திருந்தனர்.

ஊவா மாகாண சபை 34 உறுப்பினர்களைக் கொண்டுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு காணப்பட்ட 19 ஆசனங்கள், திஸ்ஸ குட்டிஆரச்சி இணைந்துகொண்டதை அடுத்து 20 ஆக அதிகரித்தது.

மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டு உறுப்பினர்கள் இந்த சபையில் இருக்கின்றனர்.

இன்றை மாகாண சபை அமர்வுகளில் கலந்துகொள்ளாத எதிர்க்கட்சித் தலைவர் ஹரீன் பெர்னாண்டோ ஆளும் தரப்பை சேர்ந்த ஐந்து உறுப்பினர்களின் சத்தியக் கடதாசிகளுடன் ஊவா மாகாண ஆளுர் நந்தா மெத்தீவை சந்தித்தார்.

இந்த ஐந்து பேர்களுள் வடிவேல் சுரேஷ் மற்றும் இதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துகொண்ட திஸ்ஸ குட்டிஆரச்சி ஆகிய இருவரும் வருகை தந்திருந்தனர்.

மாகாண சபையின் அதிகாரத்தை தமக்கு பெற்றுத்தருமாறு ஹரீன் பெர்னாண்டோ இதன் போது ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்