உறவுகளை மீட்டுத்தருமாறு பாப்பரசரிடம் கோரி வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம்

உறவுகளை மீட்டுத்தருமாறு பாப்பரசரிடம் கோரி வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

13 Jan, 2015 | 8:48 pm

காணாமற்போனோர் தொடர்பில் பரிசுத்த பாப்பரசர் கவனத்தில் எடுக்க வேண்டும் என கோரி வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (13) மாலை கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டத்தில் காணாமற்போனோரின் உறவுகள் கலந்துகொண்டு அமைதியான முறையில் பதாதைகளை ஏந்தி தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதன் போது “திருத்தந்தையே தமிழ் மக்கள் மீது கருணை காட்டுங்கள்,  எமக்கு நீதியை பெற்றுத்தாருங்கள்” என்று கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடத்தப்பட்டு காணாமற்போன தமது உறவுகளை  மீட்டுத்தருமாறும் அவர்கள் வலியுறுத்தினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்