இன்று முதல் 13 விசேட ரயில்கள் சேவையில்

இன்று முதல் 13 விசேட ரயில்கள் சேவையில்

இன்று முதல் 13 விசேட ரயில்கள் சேவையில்

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2015 | 11:42 am

பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் திருத்தந்தையிடம் ஆசிபெறுவதற்காக வருகைதும் பக்தர்களின் நலன்கருதி இன்று முதல் 13 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு காலி முகத்திடலில் நாளை திருத்தந்தை பங்கெற்கும் விசேட திருப்பலி ஆராதனையிலும் மடுத் திருத்தலத்தில் நடைபெறும் ஆராதனையிலும் கலந்துகொள்ளும் பக்தர்களின் நலன்கருதி இந்த விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய இன்று மாலை 6.55 க்கு பண்டாவளையில் இருந்தும் இரவு எட்டு மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்தும் இரண்டு ரயில்கள் கொம்பனித்தெரு ரயில் நிலையம் வரை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

ஏனைய ரயில்கள் நாளை அதிகாலை வேளையில் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

கண்டி, புத்தளம், சிலாபம், குருநாகல், அவிசாவளை, மாத்தறை, காலி மற்றும் அளுத்கமை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குறித்த ரயில்கள் கொம்பனித்தெரு ரயில் வரை சேவையில் ஈடுபடவுள்ளன.

இதனைத் தவிர மாகோ மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து மடுவுக்கான விசேட ரயில்சேவைகள் நடத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்