அரச சேவையின் மாற்றத்திற்கு அர்ப்பணிப்புடன்  செயற்படுவேன் – ஜனாதிபதி (VIDEO)

அரச சேவையின் மாற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி (VIDEO)

அரச சேவையின் மாற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – ஜனாதிபதி (VIDEO)

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2015 | 10:35 am

புதிய அரசாங்கத்தின் ஊடாக அரச சேவையில் மாற்றத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி செயலகத்தில் இன்று கடமைகளை பொறுப்பேற்ற நிலையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சமய தலைவர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்ததாவது

[quote]அரச சேவையில் நாங்கள் அரசர்கள் அல்ல. பொது சேவகன் என்ற ரீதியில் உண்மையான மனிதநேய சமூகமொன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்லாட்சியை நிலைநாட்ட  வேண்டிய பல விடயங்களை நிறைவேற்றுவதற்கு நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதனால் நாங்கள் புதிய அரசாங்கம் என்ற ரீதியில் அரச சேவையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி நல்லாட்சியை ஏற்படுத்த நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். எமது பொறுப்புக்களை நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும். அதனால் அரச துறையை போன்றே, அரச சேவைக்கும் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய முன்னோடியாக திகழ வேண்டும். [/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்