இலங்கையின் விழுமியங்களை மதித்தமைக்காக மஹிந்தவுக்கும் மக்களுக்கும் ஜோன் கெர்ரி வாழ்த்து

இலங்கையின் விழுமியங்களை மதித்தமைக்காக மஹிந்தவுக்கும் மக்களுக்கும் ஜோன் கெர்ரி வாழ்த்து

இலங்கையின் விழுமியங்களை மதித்தமைக்காக மஹிந்தவுக்கும் மக்களுக்கும் ஜோன் கெர்ரி வாழ்த்து

எழுத்தாளர் Bella Dalima

09 Jan, 2015 | 5:10 pm

வெற்றிகரமாகத் தேர்தலை நடத்தி முடித்தமை தொடர்பில் இலங்கை மக்கள் பெருமைகொள்ள வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர், பாதுகாப்புப் படையினர், இலங்கை சிவில் சமூகத்தினர், பிரசார காலத்தில் எவ்வித வன்முறைகளையும் மேற்கொள்ளாது அமைதியை உறுதிப்படுத்திய ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவருக்கும் அமெரிக்கா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டு அமைதியாகவும், முறையாகவும், அதிகாரங்களைக் கையளித்து இலங்கையின் விழுமியங்களுக்கு மதிப்பளித்தமை தொடர்பில் மஹிந்த ராஜபக்ஸவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக ஜோன் கெர்ரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மக்கள் தீர்ப்பிற்கு மதிப்பளித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஸ விடுத்த கருத்தானது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல் காலத்தில் காணப்பட்ட அமைதி, ஜனநாயகம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றை இலங்கையில் தொடர்ந்தும் பேணுவதற்கு புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜோன் கெர்ரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்