வடக்கு கிழக்கு மாகாணங்களில் மைத்திரிபால சிறிசேன அமோக வெற்றி

வடக்கு கிழக்கு மாகாணங்களில் மைத்திரிபால சிறிசேன அமோக வெற்றி

வடக்கு கிழக்கு மாகாணங்களில் மைத்திரிபால சிறிசேன அமோக வெற்றி

எழுத்தாளர் Staff Writer

09 Jan, 2015 | 12:45 pm

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தேர்தல் தொகுதிகளில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அதிகளவிலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

யாழ் தேர்தல் தொகுதியில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 2,53, 574 வாக்குகளை பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஸ 74 ,454 வாக்குகளை பெற்றுள்ளார்.

வன்னி தேர்தல் தொகுதியில் 1,41,417 வாக்குகளை மைத்திரிபால சிறிசேன பெற்றதுடன் மகிந்த ராஜபக்ஸ 34,377 வாக்குகளை பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,00, 422 வாக்குகளால் மைத்திரிபால சிறிசேன வெற்றியீ்ட்டினார்.  அதேவேளை 41,631 வாக்குகளை மகிந்த ராஜபக்ஸ பெற்றுக்கொண்டார்.

திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் 2,33,360 வாக்குகளை புதிய ஜனநாயக முன்னணியின் மைத்திரிபால சிறிசேன பெற்றார். இந்த தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் 1,21,027 வாக்குகளை பெற்றார்.

திருகோணமலை மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் மைத்திரிபால சிறிசேன 1,40,338 வாக்குகளையும், மகிந்த ராஜபக்ஸ 52,111 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்