மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்கிறார் அநுரகுமார

மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்கிறார் அநுரகுமார

எழுத்தாளர் Bella Dalima

09 Jan, 2015 | 10:21 pm

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க  ஊடக சந்திப்பில் இன்று கலந்துகொண்டு எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.
 நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்க செயற்படவேண்டியுள்ளதாகவும் மீண்டும் 18 ஆவது திருத்தத்தை இரத்து செய்து 17 ஆவது திருத்தத்தின் ஊடாகக் கட்டியெழுப்பப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து அதனூடாக நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை  எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தகவல் அறிந்துகொள்ளும் உரிமையை சட்டமாக்கி மக்களுக்கு அரசாங்கத்தின் நிதி செயற்பாடு மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பாக தெரிந்துகொள்வதற்குத் தேவையான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்