மைத்திரிபால சிறிசேன 51.28 வீத வாக்குகளை  பெற்று வெற்றியீட்டியுள்ளார்

மைத்திரிபால சிறிசேன 51.28 வீத வாக்குகளை பெற்று வெற்றியீட்டியுள்ளார்

மைத்திரிபால சிறிசேன 51.28 வீத வாக்குகளை பெற்று வெற்றியீட்டியுள்ளார்

எழுத்தாளர் Staff Writer

09 Jan, 2015 | 12:36 pm

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நேற்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார்.

51.28 வீத வாக்குகளை மைத்திரிபால சிறிசேன பெற்றுள்ளார். அதன் பிரகாரம் மைத்திரிபால சிறிசேன மொத்தமாக 62,17, 162 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார்.

தேர்தல்கள் செயலகத்தில் இன்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தேர்தல் வெற்றியினை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட வேட்பாளர்கள் சிலரும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்