புதிய அரசாங்கம் தம்முடன் தொடர்ந்தும் நட்புறவைப் பேணும் என நம்பிக்கை வௌியிட்டுள்ளது சீனா

புதிய அரசாங்கம் தம்முடன் தொடர்ந்தும் நட்புறவைப் பேணும் என நம்பிக்கை வௌியிட்டுள்ளது சீனா

புதிய அரசாங்கம் தம்முடன் தொடர்ந்தும் நட்புறவைப் பேணும் என நம்பிக்கை வௌியிட்டுள்ளது சீனா

எழுத்தாளர் Bella Dalima

09 Jan, 2015 | 8:15 pm

இலங்கையில் மஹிந்த ராஜபக்ஸவின் காலப்பகுதியில் பொருளாதார ரீதியிலும், தந்திரோபாய ரீதியிலும் ஆழமாக நிலைகொண்டிருந்த சீனா, புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
புதிய அரசாங்கம் தமது நாட்டுடன் தொடர்ந்தும் நட்புறவைப் பேணும் எனவும் சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கையிலிருந்த கடந்த அரசாங்கங்கள், சீனாவுடன் சிறந்த கொள்கைகளைக் கொண்டிருந்ததாகவும் நம்பிக்கை மற்றும் இருதரப்பு நன்மைகளை அடிப்படையாகக்கொண்டு இரு நாட்டு மக்களினதும் பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையில் கடந்த காலங்களில் ஒத்துழைப்புடன் கூடிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹொங் லீ  குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்