பாரதூரமான பிரச்சினைகள் பலவற்றுக்கு புதிய ஜனாதிபதி அவசர தீர்வுகாண வேண்டியுள்ளது – த.தே.கூ

பாரதூரமான பிரச்சினைகள் பலவற்றுக்கு புதிய ஜனாதிபதி அவசர தீர்வுகாண வேண்டியுள்ளது – த.தே.கூ

பாரதூரமான பிரச்சினைகள் பலவற்றுக்கு புதிய ஜனாதிபதி அவசர தீர்வுகாண வேண்டியுள்ளது – த.தே.கூ

எழுத்தாளர் Bella Dalima

09 Jan, 2015 | 10:16 pm

இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் ஜனநாயகத்தின் உண்மையான பயனாளர்களாக நன்மைபெறும் வகையில், தேசிய பிரச்சினைக்கான கௌர தீர்வு  உள்ளிட்டவற்றிற்கு  புதிய ஜனாதிபதி அவசரமாக தீர்வுகாண வேண்டியிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
புதிதாகத் தெரிவாகியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது ஆலோசனைக்கு அமைய, மைத்திரிபால சிறிசேனவுக்கு தேர்தலில் பெரும் ஆதரவளித்த மக்களுக்கு, குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களுக்கு, நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பாரதூரமான பிரச்சினைகள் பலவற்றுக்கு  புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவசரமாக தீர்வுகாண வேண்டியிருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்